ETV Bharat / bharat

மதுபானக் கொள்கை ஊழல் - மணீஷ் சிசோடியாவிடம் நாளை சிபிஐ விசாரணை - டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா

மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்காக நாளை நேரில் ஆஜராகும்படி, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

CBI
CBI
author img

By

Published : Oct 16, 2022, 2:15 PM IST

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. அதேபோல், இந்தோ ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சமீர் மகேந்திரு, குருகிராமில் உள்ள பட்டி ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் அமித் அரோரா, இந்தியா அஹெட் நியூஸ் நிர்வாக இயக்குநர் மூதா கவுதம் உள்ளிட்ட பலரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த மதுபானக் கொள்கை தொடர்பான வழக்குகளில், சமீர் மகேந்திரு, ஆம்ஆத்மி பிரமுகர் விஜய் நாயர், ஹைதராபாத் தொழிலதிபர் அபிஷேக் போயின்பல்லி ஆகியோர் மத்திய ஏஜென்சிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்காக நாளை(அக்.17) நேரில் ஆஜராகும்படி, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிசோடியா, "எனது வீட்டில் 14 மணி நேரம் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது, எதுவும் வெளிவரவில்லை. எனது வங்கி லாக்கரை சோதனை செய்தனர், எனது கிராமத்திலும் சோதனை நடத்தினர், எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது மீண்டும் விசாரணைக்காக என்னை அழைத்துள்ளனர். நாளை காலை 11 மணிக்கு சிபிஐ தலைமையகத்திற்கு சென்று எனது முழு ஒத்துழைப்பையும் தருவேன். வாய்மையே வெல்லும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பிரபல மது தொழிலதிபரான சமீர் மகேந்திரு கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.