கேரள உயா் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா் கெமால் பாஷா. பல முக்கியத் தீர்ப்புகளை கேரள உயர் நீதிமன்றத்தில் வழங்கிய இவர், அந்த மாநிலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெறும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவந்தார்.
இந்நிலையில் அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி கெமால் பாஷா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் என்னை அணுகினர். பின்னர், நான் போட்டியிட எனக்குத் தொகுதி அளித்தனர். அந்தத் தொகுதி எனக்கு உகந்ததாக இல்லை. அதனால் அதை மாற்றினால், அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயார்” என்றார்.
இது குறித்து கேரள காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மூத்தத் தலைவருமான மனகாடு சுரேஷ் கூறுகையில், "அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் யுடிஎஃப் வேட்பாளராக நீதிபதி கெமல் பாஷா போன்ற ஒருவர் போட்டியிடுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்” என்றார்.
இதையும் படிங்க...ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்தியாவில் கரோனா தடுப்பூசி-மத்திய அரசு