ஸ்ரீநகர் (ஜம்மு-காஷ்மீர்): ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, தியாகிகள் தினத்தையொட்டி ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தியாகிகள் கல்லறைக்குச் தான் செல்வதைத் தடுக்கும் பொருட்டு, லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் மாநில நிர்வாகம் தன்னை, வீட்டுக் காவலில் சிறை வைத்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
"இன்று தியாகியின் கல்லறைக்குச் செல்ல விரும்பியதற்காக நான் வீட்டுக் காவலில் சிறைவைக்கப்பட்டு உள்ளேன். இந்த நேரத்தில் இந்திய அரசாங்கம், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ சட்டவிரோதமாக ரத்து செய்த துரோகச் செயலை நியாயப்படுத்த, உச்ச நீதிமன்றத்தில், இயல்பு நிலை தொடர்பான தனது உயர்ந்த கூற்றுகளைப் பயன்படுத்தி உள்ளது.
வீர் சர்வர்க்கர், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, கோவால்கர் மற்றும் கோட்சே போன்ற பாஜகவினரின், வெறுப்பையும் பிரிவினையையும் பரப்பும் எண்ணங்களை எங்கள் மீது திணிக்க முடியாது. எங்களுடைய வரலாற்றை சிதைக்கவோ அல்லது எங்கள் மாவீரர்களை மறக்கவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த தியாகிகள் தினத்தில், சர்வாதிகாரிகளுக்கு எதிராக இறுதிவரை வீரத்துடன் போராடிய தியாகிகளின் துணிச்சலுக்கு நான் தலைவணங்குகிறேன்." என மெகபூபா தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
- — Mehbooba Mufti (@MehboobaMufti) July 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Mehbooba Mufti (@MehboobaMufti) July 13, 2023
">— Mehbooba Mufti (@MehboobaMufti) July 13, 2023
மேலும், ஸ்ரீநகரின் கிம்பர் பகுதியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள், தான் பூட்டி வைக்கப்பட்டுள்ள வீடியோவையும் பகிர்ந்து உள்ளார். வீடியோவில், மெஹபூபாவின் வீட்டின் பிரதான வாயில் சங்கிலியால் பூட்டப்பட்டிருப்பதையும், மெஹபூபா தன்னை ஏன் வெளியே செல்லத் தடை விதிக்கிறீர்கள் என்று பாதுகாப்புப் பணியாளர்களிடம் கேட்பதையும் மற்றும் மெஹபூபா வீட்டின் கேட்டை திறக்க முற்படுவதையும் காணலாம். அதே நேரத்தில் வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த பாதுகாப்புப் படையினரிடம் விளக்கம் கேட்கின்றார். மேலும் அந்த விடியோவில் மெஹபூபா, ஏன் சங்கிலி மற்றும் கம்பியால் கதவு மூடப்படுகிறது என்று பணியாளர்களிடம் கேட்பதை பார்க்க முடிகிறது
ஜூலை 13, 1931 அன்று ஜம்மு காஷ்மீரின் கடைசி சர்வாதிகார ஆட்சியாளர் ஹரி சிங்கின் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 22 பொதுமக்களுக்கு, காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, தேசிய மாநாட்டின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தியாகிகள் தின விழாவில் பங்கேற்பதற்காக தனது கட்சி அலுவலகத்திற்கு பாதயாத்திரையாக நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்... தொகுதி பங்கீடு, தேசிய அளவில் போராட்டம் குறித்து ஆலோசனை?