ETV Bharat / bharat

Oscar Award 2023: ஒரே படத்திற்கு 7 ஆஸ்கர்.. விருது வென்ற படங்கள் பட்டியல்!

95-வது ஆஸ்கர் விருது விழாவில் Every thing Every where all at once என்ற படம் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உள்ளிட்ட 7 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட ஆஸ்கர் அறுவடை செய்தது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 13, 2023, 10:05 AM IST

Updated : Mar 13, 2023, 10:37 AM IST

லாஸ் ஏஞ்செல்ஸ்: 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில், சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, சிறத ஆவண குறும்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியா தரப்பில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விருது வழங்கும் கமிட்டியில் உறுப்பினராக உள்ளார். மேலும் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர், இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவப்பு கம்பள விரிப்பு அலங்கரித்தனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்ற இந்த 95-வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். தொடக்க உரை நிகழ்த்திய அவர், ஆர் ஆர் ஆர் படத்தை பாலிவுட் படம் என அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது.

முதலில் சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ திரைப்படம் வென்றது. இதேபோல் எவெரிதிங் எவெரி வேட் ஆல் அட் ஒன்ஸ்(Every thing Every where all at once) படத்தில் நடித்த கி ஹு ஹுவான் சிறந்த துணை நடிகர் பிரிவிலும், ஜேமி லீ கர்டிஸ் சிறந்த துணை நடிகை பிரிவிலும் ஆஸ்கர் விருது வென்றனர்.

இந்தியாவில் இருந்து ஆவணப் படத்திற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்(the elephant whisperers) படம் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை தட்டிச் சென்றது. யானைக் கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானையை முதுமலையைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி என்ற பழங்குடியின தம்பதி பராமரிப்பது மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்.

தொடர்ந்து சிறந்த Visual Effects-க்கான விருது அவதார்- 2 தி வே ஆப் வாட்டர் படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது ஆல் கொயட் ஆன் த வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் 'ஆன் ஐரிஷ் குட்பை' (An Irish Goodbye) என்ற படத்திற்கும், சிறந்த ஆவணப் படத்திற்கான விருது 'நவால்னி' (Navalny) படத்திற்கும் வழங்கப்பட்டது.

இதே பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவணப் படமான ஆல் தட் ப்ரீத்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. ஜம்மு காஷ்மீரை சொந்த ஊராக கொண்ட ஷெனக் சென், ஆல் தட் ப்ரீத்ஸ் படத்தை இயக்கியும், தயாரித்தும் இருந்தார். ஆல் தட் ப்ரீத்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்காதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக ஆஸ்கர் மேடையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பாடப்பட்டது. பாடலுக்கு நடனக் கலைஞர்கள் உற்சாக நடனமாடினர். தொடர்ந்து நடந்த விழாவில் சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது 'தி வேல்' படத்திற்கும், சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது பிளாக் பந்தர் படத்துக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருந்து ஆர் ஆர் ஆர் படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் கீரவாணி, பாடல் ஆசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர்.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் எவ்ரி திங் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ் (Every thing Every where all at once) திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. சிறந்த நடிகை விருதை மிஷெல் யோஹ், சிறந்த இயக்குநர் டேனியல் கிவான், சிறந்த படத் தொகுப்பிற்காக பால் ரோஜர்ஸ் ஆகியோர் ஆஸ்கர் விருது வென்றனர்.

இதையும் படிங்க: Naatu Naatu song: "நாட்டு நாட்டு" பாடலுக்கு ஆஸ்கர் விருது!

Last Updated : Mar 13, 2023, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.