பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரூ. 28,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று (ஜூன் 20) தொடங்கி வைத்தார். அந்த வகையில், பெங்களூருவில் ரூ. 280 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மூளை ஆராய்ச்சி மையத்தை (Centre for Brain Research) திறந்து வைத்தார். அதோடு பக்ஷி பார்த்தசாரதி பன்னோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பேசிய மோடி, "“இந்திய அறிவியல் கழகத்தில் மூளை ஆராய்ச்சி மையத்தை தொடங்கிவைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இத்திட்டத்திற்கு நானே அடிக்கல் நாட்டியது கூடுதல் மகிழ்ச்சி. இந்த மையம் மூளை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு முன்னணி ஆராய்ச்சி மையமாகத் திகழும். நாடு முழுவதும் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டிய சூழலில், பக்ஷி பார்த்தசாரதி பன்னோக்கு மருத்துவமனையின் தொடக்கப் பணிகள் முக்கியத்துவம் பெறுகிறது. வருங்காலத்தில் சுகாதாரத் துறையை வலுப்படுத்தி, ஆராய்ச்சியை இது ஊக்குவிக்கும். மூளை ஆராய்ச்சி மையம் அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்யக்கூய வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
வயது மூப்பினருக்கான மூளை சம்பந்தமான நோய்களை களைவதற்கு ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தவுள்ளது. நாட்டில் மருத்துவ ஆராய்ச்சியில் மிகப் பெரிய பங்களிப்பை இது அளித்திடும். புதிய கண்டுபிடிப்புகளுடனான தீர்வுகளுடன் நாட்டில் சுகாதார சேவைகள் மேம்பட இம்மையம் உதவும். ஒவ்வொரு நாடும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடுவானில் சிக்கிய கேபிள் கார்... 11 பேர் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணி தீவிரம்...