தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, ஆப்கன் மக்கள் உள்பட பல்வேறு நாட்டின் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர்.
அதன்படி, ஒன்றிய அரசு ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ராணுவ விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி காபூலில் இருந்து காபூல் இந்திய தூதர தூதர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட நபர்களும், ஆகஸ்ட் 21ஆம் தேதி சி -300 ராணுவ விமானம் 85 இந்தியர்களும் நாடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை , இந்திய விமானப் படையின் சி17 ரக விமானம் 168 இந்தியர்களுடன் காபூலில் இருந்து புறப்பட்டுள்ளது. அதில், 107 பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்த விமானம் காசியாபாத் ஹின்டன் விமான படை தளத்தை வந்தடைய உள்ளது. அங்கிருந்து டெல்லிக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இன்று(ஆகஸ்ட்.22) மட்டும் மொத்தமாக 300 இந்தியர்களை காபூலி இருந்து அழைத்துவரத் திட்டமிட்டுள்ளதாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் முன்னதாக, 135 இந்தியர்களை காபூலிலிருந்து டோஹாவுக்கு அழைத்து வந்து, இந்தியாவிற்குப் பத்திரமாக அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகை உலுக்கிய வீடியோ... ஆப்கன் குழந்தை தந்தையிடம் ஒப்படைப்பு