நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர்
இரண்டாம் கட்ட நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் நாள் அமர்வு இன்று தொடர்ந்து நடைபெறுகிறது.
![Etv Bharat Tamilnadu- Important events to look for today, குடியரசு தலைவர் சென்னை வருகை, கோவையில் இன்று முதல் இ-பாஸ் கட்டாயம், திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை, தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு, நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர், ETVBharatNewsToday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10928635_parliament.jpg)
குடியரசு தலைவர் சென்னை வருகை
தமிழ்நாட்டில் மூன்று நாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார்.
![Etv Bharat Tamilnadu- Important events to look for today, குடியரசு தலைவர் சென்னை வருகை, கோவையில் இன்று முதல் இ-பாஸ் கட்டாயம், திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை, தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு, நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர், ETVBharatNewsToday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10928635_president.jpg)
கோவையில் இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்
கேரளாவிலிருந்து கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இ-பாஸ் அனுமதி கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி அறிவித்துள்ளார். கேரளாவில் கரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து இக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
![Etv Bharat Tamilnadu- Important events to look for today, குடியரசு தலைவர் சென்னை வருகை, கோவையில் இன்று முதல் இ-பாஸ் கட்டாயம், திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை, தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு, நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர், ETVBharatNewsToday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10928635_kovai.jpg)
திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவை எந்தெந்தத் தொகுதிகள் என இறுதிச்செய்ய இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
![Etv Bharat Tamilnadu- Important events to look for today, குடியரசு தலைவர் சென்னை வருகை, கோவையில் இன்று முதல் இ-பாஸ் கட்டாயம், திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை, தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு, நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர், ETVBharatNewsToday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10928635_dmk_cong.jpg)
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக - தேமுதிக இடையே இன்னும் தொகுதி பங்கீடு உறுதிசெய்யாமல் உள்ளது. இது குறித்து முடிவு செய்ய கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
![Etv Bharat Tamilnadu- Important events to look for today, குடியரசு தலைவர் சென்னை வருகை, கோவையில் இன்று முதல் இ-பாஸ் கட்டாயம், திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை, தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு, நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர், ETVBharatNewsToday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10928635_dmdk.jpg)
சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு
பபாசி நடத்தும் சென்னைபுத்தகக் காட்சி கடந்த 14 நாள்களாக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது.
![Etv Bharat Tamilnadu- Important events to look for today, குடியரசு தலைவர் சென்னை வருகை, கோவையில் இன்று முதல் இ-பாஸ் கட்டாயம், திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை, தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு, நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர், ETVBharatNewsToday](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10928635_book_fair.jpg)