ETV Bharat / bharat

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM

ஈடிவி பாரத்தின் நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

11AM
11AM
author img

By

Published : Sep 22, 2021, 11:05 AM IST

1.கண்மாயை மீட்டுத்தர கோரிய மனு: பதிலளிக்க தேனி ஆட்சியருக்கு உத்தரவு

பெரியகுளம் தென்கரை பகுதியுள்ள கண்மாயில் சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிப்புச் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை மீட்டுத்தர உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிய மனு மீதான விசாரணையில் தேனி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல்செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

2.தடுப்புச் சுவர் மீது ஷேர் ஆட்டோ மோதி விபத்து: புதுமாப்பிள்ளை உள்பட மூவர் மரணம்!

தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூருக்கு ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

3. கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காணொலி வைரல்!

ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரைப் பகுதியில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய நிகழ்வு தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

4. கோவளம், ஈடன் கடற்கரைகளுக்கு நீலக்கொடிச் சான்று

கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடிச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

5.குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

6. நீட் ஓர் உயிர்கொல்லி தேர்வு - நீதிபதி ஏ.கே. ராஜனின் அறிக்கையைப் பாராட்டிய கமல்

நீட் ஓர் உயிர்கொல்லி தேர்வு என்பதனை நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அறிக்கை உரக்கச் சொல்வதாகவும், சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரான தேர்வுதான் நீட் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

7.தனியார்மயமானால் 10 மடங்கு கட்டணம் உயரும் - ரயில்வே தொழிற்சங்கம்

ரயில்வே துறை தனியார்மயமானால் கட்டணம் பத்து மடங்காக உயர்ந்து, நேரடியாக மக்களைப் பாதிக்கும் எனத் தெரிவித்து ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

8.கோவிட்-19: இந்தியாவில் ஒரேநாளில் 27,000 பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26 ஆயிரத்து 964 பாதிப்பும், 383 உயிரிழப்பும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.முக்கியச் சந்திப்புகளை எதிர்நோக்கி அமெரிக்கா செல்லும் மோடி!

ஐநா சபைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார்.

10.நடிகை மியா ஜார்ஜின் தந்தை காலமானார்

நடிகை மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.