1. 5ஆவது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கரோனா தொற்று பாதிப்பால் நான்காயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
2. 8 போட பயந்த வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுநர் பயிற்சியை முடித்தவர்களுக்கு வாகன உரிமம் வழங்கும் புதிய நடைமுறையை ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கொண்டுவந்துள்ளது.
3. ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்தடைந்த 1,26,000 கோவாக்சின் தடுப்பூசிகள்
தெலங்கானாவின் ஹைதராபாத்திலிருந்து மூன்றாவது நாளாக ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
4. குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்: பிஞ்சுகளைக் கிள்ளி எறியாதீர்!
தொற்று நோயின் காரணமாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக ஒன்பது மில்லியன் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறும் இடர் உள்ளதாக உலக சுகாதார அமைப்பும், யுனிசெஃப்பும் எச்சரித்துள்ளன.
5. 'வடலூர் சத்திய ஞான சபையின் சர்வதேச மையம் விரைவில்' - அமைச்சர் சேகர்பாபு
வடலூர் சத்திய ஞான சபையின் சர்வதேச மையம் அமைக்க விரைவில் பணி தொடங்க உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
6. 'தென் மாநிலங்களுக்கு 1,48,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் விநியோகம்!'
14800 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை நாட்டின் தென் மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்கு 4500 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
7. ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் விலை 54 விழுக்காடு வரை வீழ்ச்சி!
ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் வர்த்தக விலையில், மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயம் செய்ததையடுத்து, அவற்றின் விலை 54 விழுக்காடு வரை குறைந்துள்ளது என ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
8. வங்கியாளர்களுடன் அமைச்சர் பி.டி.ஆர். ஆலோசனை
தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் சிறப்புக் கூட்டம், நிதியமைச்சர் பழனிவேல் தியாகாராஜன் தலைமையில் நேற்று (ஜுன் 11) காணொலி வழியாக நடைபெற்றது.
9. 1300 இந்திய சிம் கார்டுகளை சீனாவிற்கு கடத்திய நபர் கைது
இதுவரை 1300 இந்திய சிம் கார்டுகளை சீனாவிற்கு கடத்திய அந்நாட்டைச் சார்ந்த நபரை, இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
10. நிவாரணம் வழங்குவதில் தாமதம்: அமைச்சர்கள் வருகைக்காகக் காத்திருப்பு என அர்ச்சகர்கள் புகார்
கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்குவதாக அறிவித்த நிவாரணத் தொகையை வழங்காமல், அமைச்சர்களுக்காகக் காத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என அர்ச்சகர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.