மேஷம்: உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை மகிழ்ச்சிப்படுத்த நீங்கள் முயற்சி செய்வீர்கள். அவர்கள் மனதைக்கவர புதுமையான முயற்சி மேற்கொள்வீர்கள். நன்மைகள் மற்றும் உறவினர்கள் தொடர்பாக அதிருப்தி இருக்கக்கூடும். எனினும் புதிய நண்பர்களுடன் மாலையில் விருந்துக்கு செல்வீர்கள்.
ரிஷபம்: இன்று நீங்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப் பட்டு இருப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் உணர்ச்சிப் போராட்டம் காரணமாக பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் சந்திப்பின்போது, மற்றவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக குழப்பமான நிலை நிலவக் கூடும். விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
மிதுனம்: உங்களை சுற்றி இருக்கும் மக்களிடம், நீங்கள் ஆராய்ந்த விஷயங்களை, எடுத்து கூறுவீர்கள். அவர்களும் உங்களது உணர்வுகள் மற்றும் எண்ணங்களை புரிந்து கொள்வார்கள். உங்களது எண்ணங்கள் ஈடேற அவர்கள் ஒப்புதல் வழங்குவார்கள். பொதுவாக என்று வேடிக்கை மற்றும் குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும்.
கடகம்: உங்களது பணியில், முக்கிய நாளாக இருக்கும். பணி மாற்றம், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு ஏற்படலாம். அதோடு கூடவே உங்களது கடமைகளும் அதிகரிக்கும். புதிய வேலை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஒரு நல்ல வேலை வாய்ப்பையும் நீங்கள் நிராகரிக்க கூடும்.
சிம்மம்: பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்கவும் புதிய தொடர்புகளை உருவாக்கவும், இன்று சிறந்த நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தரக் கூடும். வீட்டில் சிரிப்பு மழை பொழியும். விருந்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு நீங்கள் சிறந்த வகையில் விருந்து அளிப்பீர்கள்.
கன்னி: இன்று உங்கள் உறவுகள் மற்றும் தொடர்புகள் மீது உணர்வுகள் ஆதிக்கம் செலுத்தும். உணர்ச்சி ரீதியான பாதிப்பின் காரணமாக நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். எனினும் மற்றவர்கள் கூறும் விஷயத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், உள்ளார்ந்த உணர்வுகளை மதித்து நடந்துகொள்வீர்கள்.
துலாம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பீர்கள். அது பணியில் உள்ள ஈடுபாடு அல்லது குடும்பத்தின் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். வர்த்தகத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றி, நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்: இன்று நீங்கள் நீங்கள் அன்பு செலுத்துபவர் களுக்காக அதிக அளவில் பணம் செலவழிப்பீர்கள். நமக்கு நெருக்கமானவர்களுக்கு செலவழிக்கும் போது, பணத்தைப் பற்றி நினைக்கக் கூடாது அல்லவா? அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க, அல்லது பிற இடங்களுக்கு நீங்கள் கூட்டிச் செல்ல கூடும்.
தனுசு: பிரச்சினைகள் அல்லாத குழந்தைப் பருவத்திற்கு செல்ல நீங்கள் விரும்புவீர்கள். திட்டமிடப்படாத சுற்றுலா பயணம் போன்றவற்றை மேற்கொள்ள நீங்கள் விரும்பலாம். பழைய நண்பர்களை சந்திப்பதன் மூலம், மலரும் நினைவுகள் மூலம், மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.
மகரம்: பணியிடத்தில் உங்களுக்கு அங்கீகாரமும் பாராட்டுகளும் காத்திருக்கின்றன. சக பணியாளர்கள் உங்கள் வெற்றியை பார்த்து பொறாமைப்படாமல், அவர்கள் உங்களுக்கு ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால் புதிய பணிகளில் வரும் சாதனைகளில் திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.
கும்பம்: வலியைக் கொடுக்கும் உங்கள் கடவுள், சுகத்தையும் வழங்குவார்கள். இன்றைய நாளின் தொடக்கத்தில், செய்யவேண்டிய பணி அதிகம் இருந்தாலும், இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து முடித்து விடுவீர்கள்.
மீனம்: நீங்கள் மோசமான குணமும் பொறாமை குணமும் கொண்டவரல்ல. ஆனால் இது போன்ற தன்மை ஏற்படாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒருவர் உங்கள் புகழையும் மதிப்பையும் கெடுக்கும் எண்ணத்தில் செயல்படலாம். எனினும் கோபப்படாமல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நிதானமாக உங்கள் அன்றாட பணியை கவனிக்கவும்.
இதையும் படிங்க: WEEKLY HOROSCOPE... ஆகஸ்ட் 5ஆம் வாரத்திற்கான ராசிபலன்...