ETV Bharat / bharat

பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM

ஈடிவி பார்த்தின் பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

11 AM
11 AM
author img

By

Published : Sep 14, 2021, 11:15 AM IST

1. நீட் தேர்வு - மேலும் ஒரு தற்கொலை

அரியலூரில் நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

2. 7 துறைகளில் மோசமான நிதி மேலாண்மையால் கோடிக்கணக்கில் வீண் செலவு- சிஏஜி

தமிழ்நாட்டில் உயர்கல்வி, ஊரக உள்ளாட்சி உள்ளிட்ட 7 துறைகளில் மோசமான நிதி மேலாண்மையினால் கோடிக்கணக்கில் வீண் செலவு ஏற்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. 'கீழடி உண்மைகள் வெளிவரக்கூடாது என்பதுதான் ஒன்றிய அரசின் எண்ணம்'

கீழடி அகழாய்வு மூலம் உண்மைகள் வெளிவந்து விடக்கூடாது என்பதுதான் ஒன்றிய அரசின் எண்ணமாக இருப்பதாக சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

4. கந்துவட்டி கொடுமை: நடிகை ஜெயலட்சுமி மீது புகார்

மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வங்கியில் லோன் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை பெற்றுக்கொடுத்துவிட்டு, தற்போது கந்துவட்டி கொடுமைக்கு உள்ளாக்குவதாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

5.திமுக தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்கும்- அண்ணாமலை

திமுக தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

6.குறுகிய கால மாணவர்களுக்கான "நிர்வாக செய்முறை பயிற்சி திட்டம்"

இளைஞர்களுக்கு அரசின் செயல்பாடுகளில் செய்முறை அனுபவம் அளிக்கும் வகையில் குறுகிய கால "மாணவர்களுக்கான நிர்வாக செய்முறை பயிற்சி திட்டம்" அறிமுகப்படுத்தப்படும் என சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி - உயர் நீதிமன்றம் உத்தரவு

அனைத்து அரசு கட்டிடங்களிலும், அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8.காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைவரும் தயாராக வேண்டும் - வெங்கையா நாயுடு

இனிவரும் காலங்களில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து தயாராக வேண்டும் என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

9.கவினின் லிஃப்ட் பட வெளியீட்டில் ஏற்பட்ட புதிய சிக்கல்

நடிகர் கவின் நடித்துள்ள 'லிஃப்ட்' படத்தின் வெளியீட்டில் புதிய குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

10. 500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் 500 ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.