விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப் 10 ஏவுகணை
புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி - எஃப் 10 ஏவுகணை, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று (ஆக.12) காலை 5.43 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இன்று சர்வதேச யானைகள் தினம்
சர்வதேச யானைகள் தினம் ஒவ்வாரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். உலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. அதிலும் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான யானைகள் வாழ்கின்றன
15 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று 15 மாவட்டங்களில் (நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி) கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடல்
மகளிர் சுய உதவிக் குழுவினருடன் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாடுகிறார். அப்போது, நான்கு லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு 1,625 கோடி ரூபாய் நிதியை விடுவிக்கிறார்.
இன்று முதல் லார்ட்ஸ் டெஸ்ட்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் 2ஆவது ஆட்டம் லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.