ஹைதராபாத்: சமீபத்தில் நடைபெற்ற மூன்றாவது KAM (Kids, Animation & More) மற்றும் Ann விருதுகளில், நமது 'ஈடிவி பால் பாரத் தொலைக்காட்சி' மூன்று பிரிவுகளின்கீழ் விருதுகளைப்பெற்றுள்ளது.
ஈடிவி குழுமத்தைச்சேர்ந்த குழந்தைகளுக்கான பிரத்யேக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் 'ஈடிவி பால் பாரத் தொலைக்காட்சி', சிறந்த முற்-பள்ளி நிகழ்ச்சிக்கான விருதை 'wisdom Tree' எனும் நீதிக்கதைகள் சொல்லும் நிகழ்ச்சிக்கும், சிறந்த அனிமேட்டட் கதாபாத்திர பயன்படுத்துதலுக்கான விருதை 'Pushup Challenge' எனும் நிகழ்ச்சிக்கும், சிறந்த அனிமேட்டட் பாடலுக்கான விருதை ‘அபிமன்யூ தி யங் யோதா’ எனும் பாடலுக்கும் பெற்றுள்ளது.
குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக ஈடிவி குழுமத்தைச்சார்ந்த பால் பாரத் தொலைக்காட்சி விதவிதமான கார்டூன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்துவருகிறது. நமது தொலைக்காட்சி 4 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக ஆக்ஷன், அட்வெண்ட்சர், காமெடி, எபிக், மிஸ்ட்ரீ, ஃபாண்டசி, மோரல் போன்ற பல்வேறு ஜானர்களில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்துவருகிறது.
நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில், டப் செய்யப்பட்டு குழந்தைகளுக்கான தரமான பிரத்யேக நிகழ்ச்சிகளை, நமது ஈடிவி பால் பாரத் சேனல் மூலம் ஒளிபரப்பு செய்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Video:கர்நாடகாவில் பேருந்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு