பெங்களூரு : சார்ஸ் கோவிட்-2 வகையில் மாறுபாடு அடைந்த எடா (Eta) வைரஸ் பாதிப்பு கர்நாடகாவில் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பு தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மூடபித்ரி பகுதியில் உள்ள ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இவர் துபாயிலிருந்து கர்நாடகா திரும்பியவர் ஆவார். இவரின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு சார்ஸ் கோவிட்-2 மாறுபாடு வைரஸான எடா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது அவரிடம் பெறப்பட்ட மாதிரிகள் சுகாதார துறையால் மரபணு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை அலுவலர்களின் அறிக்கையின்படி இந்த வகை வைரஸ்கள் முதன் முதலில் 2020ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : ஜிகா வைரஸை கண்டறிய ஆய்வகம் தயார் - ராதாகிருஷ்ணன் தகவல்