புதுச்சேரி: ஆரோவில்லில் தென்னிந்திய அளவிலான குதிரையேற்றப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதுவரை 21 ஆண்டுகள் குதிரையேற்றப் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, 22ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய குதிரையேற்றப் போட்டி இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று, தனி அணிவகுப்பு, நடைப்பயிற்சி பிரிவில் போட்டிகள் நடந்தன. பெங்களூரு, புனே, சென்னை, தூத்துக்குடி, ஆம்பூர், கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து 110 குதிரையேற்ற வீரர்களும் 130 குதிரைகளும் பங்கேற்றனர்.
வரும் மார்ச் 6ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு: 'நான் முதல்வன்' புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்