ETV Bharat / bharat

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.10 விழுக்காடாக குறைப்பு - தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி

2021-22ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 விழுக்காட்டில் இருந்து 8.10 விழுக்காடாகக் குறைத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரியக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.10 விழுக்காடாக குறைப்பு

author img

By

Published : Mar 12, 2022, 3:50 PM IST

டெல்லி: 2021-22ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 விழுக்காட்டில் இருந்து 8.10 விழுக்காடாகக் குறைத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரியக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2020-21ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு டெபாசிட்டுகளுக்கான 8.5 விழுக்காடு வட்டி விகிதம் மார்ச் 2021ல் மத்திய அறங்காவலர் வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதத்தில் 2020-21ம் ஆண்டிற்கான வட்டி வருமானத்தை 8.5 சதவீதத்தில் சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்க அலுவலகங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. மத்திய அறங்காவலர் வாரியத்தின் முடிவுக்குப் பிறகு, 2021-22க்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் ஒப்புதல் பெற நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படுகிறது. நிதி அமைச்சகம் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே வைப்பு நிதி வட்டி விகிதத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆளுநரை வரவேற்ற திருச்சி மேயர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.