ETV Bharat / bharat

ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்பதை உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவு! - கேரள உயர் நீதிமன்றம்

ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்பதை உறுதி செய்யுங்கள் என கேரள உயர் நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Ramesh Chennithala moves Kerala HC voters with multiple entries vote once Kerala HC orders EC on fraud voters Kerala HC ஒரு நபருக்கு ஒரு வாக்கு ரமேஷ் சென்னிதலா கேரள உயர் நீதிமன்றம்

author img

By

Published : Mar 29, 2021, 4:45 PM IST

திருவனந்தபுரம்: கேரள உயர் நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு திங்கள்கிழமை (மார்ச் 29) இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. அதில், “ஒரு நபருக்கு ஒரு வாக்கு” என்பதை உறுதி செய்யுங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கேரளத்தில் மாநில வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளன.

இதனால் ஒரு வாக்காளர் இரண்டு இடங்களில் வாக்களிக்க வாய்ப்புகள் உள்ளன” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையத்துக்கு விரிவான இடைக்கால உத்தரவு ஒன்றை அளித்துள்ளனர். அந்த உத்தரவில், நீதிமன்றம் இந்த விஷயத்தை தீவிரமாக ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த தெளிவான விவரங்கள் திங்கள்கிழமை மாலைக்குள் வெளியிடப்படும்.
மேலும், மாநிலத்தில் வாக்காளர்கள் ஒருமுறை மட்டுமே வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். கேரளத்தில் 140 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை மே2ஆம் தேதி நடைபெறுகிறது. ரமேஷ் சென்னிதலா தனது மனுவில், மாநிலத்தில் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மோசடி வாக்காளர்கள் உள்ளனர், பல தொகுதிகளில் அவர்கள் வாக்குரிமை கொண்டுள்ளனர். அவர்களை பல இடங்களில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது, பல அடையாள அட்டைகளைக் கொண்ட அனைவரையும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதலா? பியூஷ் கோயல் மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.