புதுச்சேரி: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதி, லயம் - ஜனநன்டே. இவர்கள் சில வருடங்களாக உலகத்தைச் சுற்றி வருகின்றனர். அப்போது அவர்கள் செல்லும் நாட்டிலுள்ள கலாச்சாரங்களை படம் பிடித்து, அதனை தங்களது யூடியூப் சேனலில் பதிவேற்றுவதை வேலையாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள், கடந்த வாரம் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளனர். இதன்படி நேற்று முன்தினம் சென்னைக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கு தென்னிந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக, செகண்ட் ஹேண்ட் ஆட்டோ ஒன்றை சுமார் ஒரு லட்சத்துக்கு வாங்கியுள்ளனர்.
இவ்வாறு வாங்கிய ஆட்டோவில் பிடித்த வர்ணங்களை பூசி உள்ளனர். மேலும் ஆட்டோவின் மேல் பகுதியில் சோலார் பேனல் அமைத்து, தங்களது செல்போன் மற்றும் கேமராவுக்கு தேவைப்படும் மின்சாரத்தை சேமித்துக் கொள்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் நேற்று (டிச.28) புதுச்சேரி கடற்கரை சாலை அருகே வந்தனர்.
அப்போது, "புதுச்சேரியில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் தென்னிந்தியா மற்றும் வட மாநிலங்களின் கலாச்சாரம், உணவு வகைகள், பல தரப்பட்ட மொழி ஆகியவற்றை அறிந்து கொள்ள உள்ளோம். எனவே ஐந்து மாதங்கள் இந்தியாவில் தங்குவதற்காக திட்டமிட்டுள்ளோம்" என தம்பதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மனு அளிக்க வந்த பெண் திடீரென சாமி ஆடிய வீடியோ!