ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள அவந்திபோரா மாவட்டத்தில் உள்ள அகன்ஹன்சிபோரா பகுதியில் நேற்றிரவு நடந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்ட்டனர். இவர்கள் டிவி நடிகை அம்ரீன் பட் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என காஷ்மீர் காவல் துறை தலைவர் விஜய் குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது உறுதியானது. அப்போது, பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்ததை அறிந்த பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும், அதனால் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
#Encounter has started at Aganhanzipora area of #Awantipora. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) May 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Encounter has started at Aganhanzipora area of #Awantipora. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) May 26, 2022#Encounter has started at Aganhanzipora area of #Awantipora. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) May 26, 2022
புத்தகாம் மாவட்டத்தில் உள்ள சதுரா பகுதியில் நேற்று முன்தினம் (மே 25) மூன்று பயங்கரவாதிகளால், டிவி நடிகை அம்ரீன் பட் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.