கரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருகிறது. இதற்கிடையே, மத்திய அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், "கரோனா தடுப்பூசி விநியோகத்தில் மத்திய அரசு சந்தித்திருக்கும் தோல்வியை மறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது" என்றார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெருமை ததும்பும் பேச்சு, உணர்வுகளை தூண்டும் மிகைப்படுத்தப்பட்ட உரை ஆகியவை கரோனாவுக்கு எதிரான போரை வெல்ல உதவாது. 18 நாள்களில் எவ்வாறு மகாபாரத போர் வெல்லப்பட்டதோ, அதேபோல் கரோனாவுக்கு எதிரான போரை 21 நாள்களில் வெல்வோம் என முதல் ஊரடங்கை அறிவித்த பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
-
One day the government calls the vaccination drive a ‘festival’ (utsav). On another day, it calls the drive ‘the second war’. Which is it?
— P. Chidambaram (@PChidambaram_IN) April 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">One day the government calls the vaccination drive a ‘festival’ (utsav). On another day, it calls the drive ‘the second war’. Which is it?
— P. Chidambaram (@PChidambaram_IN) April 12, 2021One day the government calls the vaccination drive a ‘festival’ (utsav). On another day, it calls the drive ‘the second war’. Which is it?
— P. Chidambaram (@PChidambaram_IN) April 12, 2021
தடுப்பூசி விநியோகத்தை ஒரு நாள் திருவிழா என்றும் இரண்டாவது நாள் போர் என்றும் அரசு தெரிவித்திருந்தது. இதில், எது உண்மை?” என பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் இன்று மட்டும் 1,68,912 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.