ETV Bharat / bharat

குறைந்தபட்ச பிஎஃப் பென்ஷனை 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்-நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

டெல்லி: தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வருங்கால வைப்புநிதி பென்ஷனை 3,000 ரூபாயாக உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்
author img

By

Published : Mar 19, 2021, 9:45 AM IST

தொழிலாளர்கள் ஊதியத்தில் மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதியில் ஒருபகுதி பென்ஷன் திட்டத்திற்காக சேமிக்கப்படுகிறது. இவ்வாறு பென்ஷன் திட்டத்திற்காக ஒருவரின் ஊதியத்தில் அதிகபட்சம் 2014ஆம் ஆண்டு வரை மாதம் 541 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு இது 1,250 ரூபாயாக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சம் தொழிலாளர் வைப்பு நிதியில் 10 ஆண்டுகள் கணக்கு வைத்திருந்தால் அவருக்கு பென்ஷன் கிடைக்கும்.

பென்ஷன் தொகை எப்படி கணக்கீடப்படுகிறது?

பென்ஷன் தொகை = அடிப்படை ஊதியம் * பணியில் இருந்த காலம் / 70

இதில் அடிப்படை ஊதியம் என்பது ஒருவருடைய அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (Dearness Allowance) மட்டும் கொண்டதாகும். பல தனியார் நிறுவனங்களில் ஒரு ஊழியரின் ஊதியம் அதிகமாக இருந்தாலும் பொதுவாக அடிப்படை ஊதியம் குறைவாகத்தான் இருக்கும். தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் பஞ்சப்படி வழங்குவது இல்லை.

உதாரணத்திற்கு ஊழியர் ஒருவர் அடிப்படை ஊதியமாக 10,000 ரூபாய் பெற்று 25 ஆண்டு காலம் பணிபுரிகிறார் என்று வைத்துக் கொள்வோம். மேற்சொன்ன கணக்கீட்டின்படி அவருக்கு எவ்வளவு பென்ஷன் தொகை கிடைக்கும் என்று பார்ப்போம்:

பென்ஷன் தொகை = அடிப்படை ஊதியம் (10000) * பணிக்காலம் (25)/70 = 3571

நாட்டில் பலர் மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். பலரின் அடிப்படை ஊதியம் 10,000க்கும் குறைவாக இருக்கிறது. அதிக காலம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதும் அனைவராலும் முடியாத காரியமாக இருக்கிறது. சில சிறிய நிறுவனங்கள் முறையாக வைப்பு நிதி செலுத்துவதும் இல்லை. ஓய்வூதியத் திட்டத்தின்படி குறைந்தபட்ச பென்ஷன் தொகையாக 1,000 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.

தற்போதுள்ள விலைவாசியில் ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையாக வழங்குவது ஒருவருக்கு எந்தப் பயனும் அளிக்காது. அதனால்தான் நாடாளுமன்ற நிலைக்குழு குறைந்தபட்ச பென்ஷன் தொகையை 3,000 ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்தி தரவேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

பிஜு ஜனதா தள எம்பி பார்த்துஹரி மஹதாப் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு கீழ்கண்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

1) பல தொழிலாளர்கள் சரியாக நீண்ட காலத்திற்கு இந்தத் திட்டத்தில் சேமிக்காததால் 1,000 ரூபாய்க்கும் குறைவான பென்ஷன் தொகை பெற்று வருகின்றனர். மேலும் பலருக்கு இந்தத் திட்டத்தில் பணம் சேமித்து இருந்தாலும் எந்த பென்ஷன் பணமும் கொடுக்கப்படுவதில்லை. பென்ஷன் தொகை வழங்கப்பட்டாலும் மிக குறைந்த அளவில் பலருக்கு 560 ரூபாய் மட்டுமே பென்ஷன் தொகையாக கொடுக்கப்படுகிறது .

2) நீண்ட காலத்திற்கு இந்தத் திட்டத்தில் சேமிக்காத தொழிலாளர்களின் குறைகளை விரைந்து களைந்து அவர்களுக்கு அதிக பென்ஷன் தொகை கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்

3) குறைந்தபட்ச பென்ஷன் தொகையை 1,000 ரூபாய் என்கின்ற அளவில் இருந்து குறைந்த பட்சம் 3,000 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரை உயர்த்தி தர வேண்டும்.

4) மேலும் இந்தத் திட்டத்தில் சேமிக்கும் பல தொழிலாளர்கள் இடையிலே பணத்தை பெற்று விடுகின்றனர். இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதற்கும் எவ்வளவு தொகை திரும்ப பெறலாம் போன்ற கட்டுப்பாடுகள் சரிவர இல்லாமல் இருக்கிறது.

5) குறைந்தபட்ச பென்ஷன் தொகை 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால் அரசுக்கு கூடுதலாக சுமார் 15,000 கோடி ரூபாய் செலவாகும்.

6) இந்தத் திட்டத்தில் உள்ள குறைகளை விரைவாக களைந்து தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த மாறுதல்களை செய்ய வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.