ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் சிலர் அரசின் கொள்கைகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து எழுதியதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் முதன்மை செயலாளர் ஏகே மேத்தா, கடந்த 17ஆம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, அரசு ஊழியர்கள் சிலர் அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுபோன்ற ஊழியர்களின் சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என முதன்மை செயலாளர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
அனைத்து மாவட்ட நிர்வாகமும், அரசு ஊழியர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல அரசுக்கு எதிராக பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதன்மை செயலாளர் ஏகே மேத்தா எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: திடீரென உள்வாங்கிய நிலம்.. அச்சத்தில் உறைந்துபோன மக்கள்.!