டெல்லி: G20 உச்சி மாநாட்டிற்கு பின் இந்தியா ஜக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) அமர்வில் கலந்து கொள்ள உள்ளது. இந்த அமர்வு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த UNGA கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ள உள்ளார்.
இந்தியாவின் முன்னாள் தூதர் ஜிதேந்திர திரிபாதி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், தற்போது இந்தியா G20 உச்சி மாநாட்டினை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதன் மூலம் தனது நிலையை இந்தியா உயர்த்தியுள்ளது. நிலையான வளர்ச்சி குழு (SDG) மீதான பேச்சுவார்த்தைகளும் G20 உச்சி மாநாடு மூலம் புதிய நம்பிக்கை பெற்றுள்ளது. SDG மூலமாக பெண்கள் வளர்ச்சிக்கு உதவுதல், பசுமை ஆற்றலுக்கு மாறுதல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் மோதல்களை தடுப்பது போன்ற 17 நோக்கங்கள் விவாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த UNGA கூட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான பருவநிலை நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் நிதி திரட்டுதல் மற்றும் பசுமை ஆற்றல் மாற்றம், சூரிய ஆற்றல் மற்றும் உயிரி எரிபொருளுக்கு மாறுதல் குறிப்பாக புதிய பொருளாதார வழித்தடம் குறித்து அனைத்து பொருட்களுக்கான விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்படாமல் இருக்க இணைப்பு மிகவும் அவசியம் என்பது குறித்து இந்தியா இந்த UNGA கூட்டத்தில் வலியுறுத்து என தெரிவிக்கப்பட்டுள்ளன.
G20 உச்சி மாநாடு நடத்தியது புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் இந்தியாவிற்கு அளித்துள்ளது. மேலும் முக்கிய நோக்கமாக உலகாளவிய பிரச்னைகள் மற்றும் உக்ரைன் குறித்தும் விவாதம் செய்ய இந்தியா முயற்சிகளை எடுக்கும் என தெரிவித்தார். 78வது ஜக்கிய நாடுகளின் பொதுச் சபையில் (UNGA) நிலையான வளர்ச்சி குழுவின் (SDG) 17 நோக்கங்கள் மற்றும் 2030ஆம் ஆண்டுக்குள் இலக்கை அடைவதற்கு தேவையான விவாதங்களை இந்தியா மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: "பன்முகத்தை கொண்டாடும் ஒவ்வொரு நேரத்திலும் நாடாளுமன்றம் தலை நிமிர்ந்து நிற்கிறது" - பிரதமர் மோடி!
UNGA கூட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பு ஜக்கிய நாடுகளுடனான இந்தியாவின் வலிமை மற்றும் வளர்ச்சியையும் உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தையும் பிரதிபலிக்கும். ஐநா பொதுச் சபையின் 78வது கூட்டம் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் இந்த கூட்டத்தில் முதல் பேச்சாளராக பிரேசில் இருக்கும் அதை தொடர்ந்து அமெரிக்க தனது உரையை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஐநா பொதுச் சபையின் 78வது கூட்டத்தில் பேச்சாளர்களின் பட்டியலின் படி செப்டம்பர் 26ஆம் தேதி காலை பொது விவாதத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றுவார். முதல் தற்காலிக பட்டியலின்படி இந்தியாவின் தலைவர் செப்டம்பர் 22ஆம் தேதி மதியம் அமர்வில் உரையாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன்-ரஷ்யா போர் வலுவடைந்து வரும் நிலையில் ஐநா பொதுச் சபையின் 78வது கூட்டத்தின் முதல் நாள் செப்டம்பர் 19ஆம் தேதி பொது விவாதத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உரையாற்ற உள்ளார். அதன்பின் செப்டம்பர் 23ஆம் தேதி ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உரையாற்ற உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஜீன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க UNGA கூட்டத்தில் வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளன. UNGAவின் 78ஆவது அமர்வின் பொது விவாதம் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டம் செப்டம்பரில் தொடங்கும். இந்த கூட்டம் உலக அளவில் அனைத்து தலைவர்களும் கவனிக்க கூடியாத இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
UNGAவில் மொத்தம் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் அமர்வின் தலைவர் வாக்கு எடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் ஒவ்வொரு நாட்டிற்கு ஒரு வாக்குகள் வழங்கப்படும் தற்போது அமர்வின் தலைவராக டெனிஸ் பிரான்சிஸ் உள்ளார்.
இதையும் படிங்க: இந்திய ஜனநாயகத்தின் இதயம் - 75ஆண்டு கடந்து வந்து பழைய நாடாளுமன்றம் குறித்து பிரதமர் உரை!