ஹைதராபாத்: புதிய கர்தினால்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டுள்ள ஹைதராபாத் பேராயர் அந்தோணி பூலா, இந்தியாவின் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் கார்டினல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் தெலுங்கு நபர் ஆவார். இந்த கோடையில் வாடிகனில் நடைபெறும் விழாவில், இந்தியாவைச் சேர்ந்த இருவர் உட்பட 21 தேவாலயக்காரர்களை கர்தினால் பதவிக்கு உயர்த்தப்போவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்திருந்தார்.
இந்தியாவிலிருந்து கோவா-டாமன் மறை மாவட்ட பிஷப் பிலிப் நேரி அன்டோனியோ செபஸ்டாவ் டி ரொசாரியோ ஃபெராவ், ஹைதராபாத் பிஷப் அந்தோணி பூலா ஆகியோர் தான் கர்தினால்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த அறுபது வயதான அந்தோணி பூலா, பிப்ரவரி 1992இல் பாதிரியாராக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2008இல் கர்னூல் ஆயராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் நவம்பர் 2020இல் ஹைதராபாத் பேராயராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்தியாவின் முதல் தலித் கர்தினாலாக ஹைதராபாத்தை சேர்ந்த பிஷப் அந்தோணி பூலா தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் பேராயரை கர்தினால் பதவிக்கு உயர்த்தியது ஒரு பெரிய மரியாதை என ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேவாலயத்தில் நிதி முறைகேடா? தட்டிக்கேட்டவரின் வீட்டிற்கு அடியாட்கள் அனுப்பிய பாஸ்டர்!