தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவுக்கும் அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தின் விருப்பங்களை நிறைவேற்றவும் கரோனா பெருந்தொற்றை தோற்கடிப்பதற்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் நலனுக்காகவும் போற்றத்தக்க தமிழ் கலாசாரத்திற்கு மேலும் பெருமை சேர்க்கவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதி கூறுகிறேன். கடினமாக உழைத்த கட்சி நிர்வாகிகளை மெச்சுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.