மக்களின் ஆதாரமாக விளங்குவதே ஆதார் அட்டையாகும். இந்த அட்டை அனைத்து இந்திய குடிமக்களுக்கும் மிக முக்கியமானதாகும். இந்த அட்டையில் 12 இலக்க எண் இருக்கும்.
இந்த 12 எண்கள் கொண்ட ஆதார் அட்டை ஒருவருக்கு கொடுக்கப்பட்டால், அந்த எண் மற்றவருக்கு கொடுக்கப்படாது. ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையையும் இணைக்கக் கோரி ஒன்றிய அரசிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதனால் ஓட்டுப்போடும்போது, கள்ள ஓட்டு போடமுடியாது. ஆதார் அட்டையுடன் பல்வேறு ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டையையும் இணைக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. இது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.
இதையும் படிங்க: 'குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் - ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடக்கமா?'