மயூர்பஞ்ச் (ஒடிசா): ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஊடாலா தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதியவர் ஒருவர் சூனியம் செய்வதாகக் கருதி அவரது உறவினர்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர் குந்தா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சரஜாமஹிதி கிராமத்தில் வசிக்கும் துங்குருசிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துங்குருவின் மனைவி குருபாரி சிங் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கால்பந்து போட்டியைக் காண வெளியில் சென்றிருந்தனர். அவர்கள் வீடு திரும்பிய போது துங்குரிவின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வீட்டின் வராண்டாவில் கிடந்துள்ளது.
வீட்டில் தனியாக இருந்த துங்குருவை சில மர்மநபர்கள் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறப்பிற்கான சரியான காரணம் தெரியவராதநிலையில் அவர் சூனியம் செய்ததால் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக இரண்டு பேரை காவலில் எடுத்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நேற்று ’ரெட் லைட் ஏரியா’வின் மகள்; இன்று NHRC குழுவில் உறுப்பினர்