ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்டத்தில் உபராகுடிங்கா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குர்ஷா மணியக்கா என்ற முதியவர், அவரது சகோதரரின் மகன் வீட்டில் உள்ள அஸ்பெஸ்டாஷ் சீட் எனப்படும் சிமென்ட் மேற்கூரை தெரியாமல் உடைத்துள்ளார். இதனால், மணியக்காவுக்கும் அவரது சகோதரரின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் முதியவரின் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினர், அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த படுகாயம் அடைந்த முதியவர் துடிதுடிக்க சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அப்பகுதி மக்கள் சிலர் முதியவரின் உடலை நல்லடக்கம் செய்தனர்.
இச்சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு குற்றவாளியினைப் பிடித்தனர். தலைமறைவாக உள்ள இருவரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் முதியவர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. முதியவர் என்றும் பாராமல் அவரது குடும்பத்தினரே கொடூரமாகத் தாக்கி, அவரைக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சுசீந்திரம் அருகே சாலையோரம் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு