ETV Bharat / bharat

உபியில் குழந்தையை கடித்துக்கொன்ற காட்டுப்பூனை

உத்தரப்பிரதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தையை காட்டுப் பூனை கடித்துக்கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை கொன்ற காட்டுப்பூனை

author img

By

Published : Dec 10, 2022, 7:54 PM IST

பிரதாப்கர்: உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் காட்டுப்பூனை தாக்கியதில் படுகாயமடைந்த 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதாப்கர் மாவட்டத்தின் கோட்வாலியை சேர்ந்த அஜய் கவுர் எனபவர், ராஜஸ்தானில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி உமா டிசம்பர் 8ஆம் தேதி இரவு தனது 8 மாத குழந்தை ராஜுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த காட்டுப்பூனை குழந்தையை தக்கி தூக்கிச்செல்ல முயன்றது. அப்போது குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனிடையே குழந்தையின் அழுகுரல் கேட்ட உமா பூனையிடம் இருந்து குழந்தையை மீட்க முயற்சித்தார். அப்போது அவருக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பின் பூனை அங்கிருந்து தப்பியோடியது.

இதையடுத்து உமா குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சாப்பாட்டில் உப்பு இல்லை.. தாபா ஷெப் அடித்துக் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.