கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 6) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், யு.டி.எஃப். கட்சி வேட்பாளர் உலாஸ் கோவூரின் தோட்டத்தில் முட்டையும், எலுமிச்சையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த முட்டையில் ஒரு பக்கம் எதிரி என்றும், மறுபக்கம் ஓம் என்றும் எழுதப்பட்டிருந்தது.
மேலும், சிவப்பு நிற கயிறு ஒன்று, மூட்டையைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்துள்ளது. இது, நிச்சயம் உலாஸ் கோவூரைத் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சியினர் செய்த 'பில்லி சூனியம்'தான் எனத் தொண்டர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இது குறித்து பேசிய உலாஸ் கோவூர், இதை யாராவது நகைச்சுவையாகச் செய்திருக்கலாம். அரசியல் எதிரிகள் எனக்கு எதிராக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை எனப் புன்னகையுடன் தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து பேசிய எல்.டி.எஃப். சுயேச்சை வேட்பாளர் கோவூர் குஞ்சுமோன், "சூனிய செயல் உதவியுடன் வெற்றிபெற விரும்பவில்லை. அந்தத் தொகுதி எல்.டி.எஃப்.இன் கோட்டையாக உள்ளது. கடந்த நான்கு முறையாக இங்கு எல்.டி.எஃப். வெற்றிவாகை சூடிவருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போலீசார் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி விட்டு கைதிகள் தப்பியோட்டம்!