ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை 'வித்யா சக்தி' உடன் கூட்டு சேர்ந்து, ஆன்லைன் வகுப்புகள் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியின் (VR) மூலம் உத்தர பிரதேசத்தின் கிராமப்புறங்களில் கல்வியில் புரட்சியை ஏற்படுத்த உள்ளனர். வாரணாசி மாவட்டம் முழுவதும் உள்ள 100 கிராமங்களில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மீடியம் வகுப்புகளை வழங்கும் திட்டமானது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று நோயால், குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே ஏற்படும் கல்வி ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதே இந்த ஒத்துழைப்பின் முதன்மை நோக்கமாக உள்ளது. இப்பாடத்திட்டமானது அத்தியாவசிய மொழி திறன்கள், கணிதம் மற்றும் அறிவியல் அடிப்படைகளில் கவனம் செலுத்துகிறது. புதுமையான தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு மூலம், பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் விகிதத்தின் அதிகரிப்பைக் கண்டுள்ளது.
STEM ஆசிரியர்கள் VR ஹெட்செட்களை வகுப்பறைகளுக்குக் கொண்டு வருவருவதன் மூலம் அவர்கள் ஆழ்ந்த சூழலில் கல்வி உள்ளடக்கத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. ஒவ்வொரு அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்களும் 3D காணொளிகளுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளதால், சிக்கலான தலைப்புகளைக் காட்சிப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் மாணவர்களுக்கு உதவுகிறது.
கேள்வி பதில் பிரிவுகள் மூலம் உரையாடல்கலாக மாற்றப்பட்டு, மாணவர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை தருகிறது. ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை, ஐஐடி மெட்ராஸின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையமாக, இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற பிரிவு 8 நிறுவனமாக இயங்குகிறது.
ஓபன் மென்டரின் முன்முயற்சியான 'வித்யா சக்தி' 2009 ஆம் ஆண்டில் சமூகப் பொறுப்புணர்வோடு சாஃப்ட்ஸ்மித் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிடெட் மூலம் நிறுவப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாக உள்ளது.
தொழில்துறை சார்ந்த மென்பொருள் திறன்களில் ஆன்லைன் படிப்புகளுக்கு கூடுதலாக, சுய மதிப்பீடு மற்றும் பயிற்சிக்காக பதிவு செய்யப்பட்ட அமர்வுகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகளை வித்யா சக்தி வழங்குகிறது. இம்முயற்சியின் தனித்துவங்களை ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “ஐஐடி மெட்ராஸில், சிறு குழந்தைகளை, குறிப்பாக கிராமப்புற இந்தியாவைச் சேர்ந்தவர்களை உயர்கல்வியைத் தொடர ஊக்குவிப்பதும், அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதும் எங்கள் பொறுப்பு.
வித்யா சக்தி என்பது நமது நாட்டின் மொத்த சேர்க்கை விகிதத்தை மேம்படுத்த உறுதிபூண்டுள்ள ஐஐடி மெட்ராஸ் உட்பட பல ஒரே எண்ணம் கொண்டநிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டுத் திட்டமாகும். எங்கள் வித்யா சக்தி திட்டத்தின் கீழ் உத்தர பிரதேசத்தில் நிறுவப்பட்ட கிராமப்புற தொடர்பு மையங்கள் இந்த முக்கியமான சமூக நோக்கத்தை அடைவதற்கு உழைக்கும். 2022-23 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட RIC-களின் வெற்றி இந்த கருத்தை மற்ற மாநிலங்களுக்கும் செயல்படுத்த எங்களை ஊக்கப்படுத்தியுள்ளது" என கூறினார்.
ஒவ்வொரு அமர்விற்கும் மூன்று முதல் நான்கு VR சாதனங்கள் பொருத்தப்பட்ட STEM பயிற்சியாளர்களை திட்ட செயலாக்கம் கொண்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் காலையில் ஒரு பள்ளிக்கும், மதியம் மற்றொரு பள்ளிக்கும் செல்கின்றனர். கருத்தை சுருக்கமாக விளக்கிய பிறகு, மாணவர்கள் சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, பாடத்தை நேரடியாக பார்க்க VR வீடியோக்களைப் பார்க்கும்படி கேட்கப்படுகிறார்கள். வீடியோ இயங்கும்போது ஆசிரியர் மாணவர்களை கேள்விகளுடன் ஈடுபடுத்துகிறார்.
ஓபன் மென்டர் டிரஸ்ட் மற்றும் வித்யா சக்தியின் நிர்வாக அறங்காவலர் பி.நாகராஜன் கூறுகையில், "ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு கல்வியாளர்கள் பெருமளவில் இடம்பெயர்வதால், கிராமப்புற குழந்தைகளுக்கு கூடுதல் கூடுதல் கல்வி வகுப்புகள் கிடைப்பதில்லை.
எங்கள் ஆன்லைன் வகுப்புகள் இந்த இடைவெளியைக் குறைக்கின்றன. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு ஊக்கமளிப்பது மிகவும் முக்கியமானது, மேலும் எங்கள் மெய்நிகர் ரியாலிட்டி கிட்கள் பள்ளிகளில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியுள்ளன, ஏனெனில் மாணவர்கள் இப்போது அவர்கள் படிப்பதைக் காணலாம். இந்த அளவிடக்கூடிய மாதிரியின் மூலம், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைவதே எங்கள் நோக்கம்.
வித்யா சக்தி முன்முயற்சியின் தனித்துவமான அம்சங்களில் மாணவர்களின் தாய்மொழியில் நடத்தப்படும் நேரடி ஆன்லைன் வகுப்புகள், விரிவான கற்றலை உறுதி செய்வதற்கான மெதுவான கற்பித்தல் அணுகுமுறை, சோதனைகளை நடத்துவதற்கான மென்பொருளைப் பயன்படுத்துதல் மாணவர்களைத் தயார்படுத்துவதற்கு தினசரி திறன் கேள்விகளைச் சேர்ப்பது ஆகியவை எதிர்கால சவால்களுக்கு அவர்களை தயார்படுத்தும்” என கூறினார்.
இதையும் படிங்க: திமுக கூட்டத்தில் ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் ; காரில் சென்றவர்களுக்கு அடி உதை!