பிகார் மாநிலத்தின் முன்னணி அரசியல் முகமும், ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான அமரேந்திரா தாரி சிங் இன்று (ஜூன்.03) அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உரத் திட்டத்தில் ஊழல் செய்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதாகியுள்ளார்.
ஆர்.ஜே.டி. கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய நண்பராகக் கருதப்படும் இவர், அம்மாநிலத்தின் முன்னணித் தொழிலதிபராகவும் விளங்குகிறார். 30 ஆண்டுகாலமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அமரேந்திரா சிங், ’சூப்பர் 30’ என்ற பெயரில் ஐஐடி நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்தையும் நடத்திவருகிறார்.
ஏற்கனவே, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆர்.ஜே.டி. கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறை தண்டனை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமரை விமர்சித்தப் பத்திரிகையாளர் மீதான தேச துரோக வழக்கு தள்ளுபடி!