அந்நியச் செலாவணி முகவர்கள் சங்கம் (FEDAI) சார்பில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது கோவிட்-19க்குப்பின் இந்தியப் பொருளாதார நிலை குறித்து பேசினார்.
அப்போது, "நடப்பாண்டு முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 23.9 விழுக்காடு சரிவைச் சந்தித்தது. இதையடுத்து 2020-21ஆம் ஆண்டு உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) 9.5 விழுக்காடு வீழ்ச்சியைச் சந்திக்கும் என ரிசரவ் வங்கி கணித்திருந்தது.
இருப்பினும், பண்டிகைக் காலத்திற்கு முன்னர் லாக்டவுன் தளர்வுகள் மேற்கொண்டதையடுத்து நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மெள்ள மீட்சி காணத் தொடங்கின. இது எதிர்பார்த்ததைவிட நம்பிக்கைத் தரும் அம்சமாகும்.
அதேவேளை, ஐரோப்பா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் கோவிட்-19இன் இரண்டாம் அலை தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. இதைக் கவனத்தில் கொண்டே வரும் நாள்களை அணுக வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லட்சுமி விலாஸ் வங்கி மீதான தடை நீக்கம்: சிங்கப்பூர் வங்கியுடன் இணைக்க அரசு ஒப்புதல்