டெல்லி : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அதன் அதிர்வலை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1 என்ற அளவுகோளில் நிலநட்டுக்கம் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
இன்று (ஜன. 11) நண்பகல் 2.50 மணிக்கு ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, காசியாபாத், நொய்டா, பரிதாபாத், குருகிராம், காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானின் லாஹூர், இஸ்லாமாபாத், கைபர் பக்துன்கவா உள்ளிட்ட நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட தகவல்களும் வெளியாகவில்லை.
-
Earthquake tremors felt in Delhi-NCR. Details awaited. pic.twitter.com/qTuaI5477B
— ANI (@ANI) January 11, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Earthquake tremors felt in Delhi-NCR. Details awaited. pic.twitter.com/qTuaI5477B
— ANI (@ANI) January 11, 2024Earthquake tremors felt in Delhi-NCR. Details awaited. pic.twitter.com/qTuaI5477B
— ANI (@ANI) January 11, 2024
இதையும் படிங்க : தலைநகர் டெல்லியில் திடீர் நிலநடுக்கம்!