இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அருணாசலப் பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள பாங்கின் அருகே நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. குறிப்பாக பாங்கினில் இருந்து வடக்கே 1174 கி.மீ. தூரத்தில் சுமார் 9.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்படவில்லை. சில மலை கிராமங்களில் உணரப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தோனேசியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளிலும் இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தோனேசியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்