அந்தமான் நிக்கோபார் தீவின், திக்லிபூருக்கு வடக்கே 320 கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு (டிசம்பர் 26) 50 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.1 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதமோ அல்லது பொருள் சேதமோ எதுவும் பதிவாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.