நேபாளத் தலைநகர் காத்மாண்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (அக். 19) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பலர் பாதுகாப்புக்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை.
சிந்துபால்சௌக் மாவட்டத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக தெரிகிறது. காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அண்டை மாவட்டங்களில் இன்று மாலை 3:07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பீகார், பாட்னா உள்ளிட்ட சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பாட்னா பிரிவு (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: யாசகம் எடுத்து சம்பாதித்த ரூ.1 லட்சத்தை கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய 80 வயது மூதாட்டி