ETV Bharat / bharat

பாக்., சீன விவகாரம்: ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஜெய்சங்கர் பதிலடி! - மத்திய பட்ஜெட் குறித்து ராகுல்

மக்களவையில் ராகுல் காந்தி தனது உரையில், 'நரேந்திர மோடி அரசு பாகிஸ்தானையும், சீனாவையும் இணைத்து இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய குற்றத்தை இழைத்துள்ளது' என்ற வைத்த கடுமையான குற்றச்சாட்டுக்கு ஜெய்சங்கர் உரிய பதிலடியைக் கொடுத்துள்ளார்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்
author img

By

Published : Feb 3, 2022, 12:07 PM IST

டெல்லி: மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கை 2022-23 நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் பிப்ரவரி 1ஆம் தேதியன்று தாக்கல்செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்றுமுதல் (பிப்ரவரி 2) குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.

அதில் பங்கேற்ற, காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்தும் குற்றஞ்சாட்டியும் பேசியிருந்தார். அவர் தனது உரையில், நரேந்திர மோடி அரசு பாகிஸ்தானையும் சீனாவையும் இணைத்து இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய குற்றத்தைச் செய்துள்ளது என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வெளியுறவுக் கொள்கையில் யுக்திசார்ந்த இலக்கு

இதற்கு உரிய பதிலை இன்று (பிப்ரவரி 3) அளித்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர். தனது பதிலில், "1963ஆம் ஆண்டு பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கை சீனாவிடம் ஒப்படைத்தது.

1970இல் சீனா கரக்கோரம் நெடுஞ்சாலையை பாகிஸ்தான் வழியாக அமைத்தது. 1970ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளும் (பாகிஸ்தான் - சீனா) நெருங்கிய அணுசக்தி ஒத்துழைப்பைக் கொண்டிருந்தன. 2013இல் சீனா - பாகிஸ்தான் பொருளாதார பாதை தொடங்கப்பட்டது.

  • அதனால் உங்களை (ராகுல் காந்தி) நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: 'அப்போது சீனாவும் பாகிஸ்தானும் தொலைவில் இருந்தனவா என்று?'

சீனர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றனர். பாகிஸ்தானையும் சீனாவையும் பிரித்துவைத்திருப்பதில் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய யுக்திசார்ந்த இலக்கைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் அடிப்படையாகும். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்களை ஒருங்கிணைத்தீர்கள்!" என்றார் புள்ளிவிவரங்களுடன்.

இந்தியாவில் இருப்போர் அறிந்திருப்பர் ராகுல்!

ராகுல் காந்தி மக்களவையில் பேசுகையில், பாஜக அரசின் இந்திய வெளியுறவுக் கொள்கையை விமர்சித்தார். மேலும், நாடு முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு சூழப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர், "குடியரசு தின விழாவுக்கு ஏன் விருந்தினரை வரவைக்க முடியவில்லை என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நாம் (இந்தியா) இலங்கை, நேபாளம், பர்மா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ளோம். எல்லா இடங்களிலும் நாம் சூழப்பட்டுள்ளோம். நம்முடைய எதிரிகள் நம்முடைய நிலையைப் புரிந்துவைத்திருக்கிறார்கள்" என உரையில் குறிப்பிட்டார்.

ராகுலின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜெய்சங்கர் அவரது ட்விட்டரில், "குடியரசு தின விழாவுக்கு நம்மால் விருந்தினரை வரவைக்க முடியவில்லை என்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி சொல்லியிருந்தார். 'இந்தியாவில் இருப்போர்' அறிந்திருப்பர், நாம் கரோனாவுக்கு மத்தியில் இருக்கிறோம் என்று.

  • In Lok Sabha, @RahulGandhi said we could not get a foreign guest for Republic Day. Those who live in India know we were in the midst of a corona wave.

    The 5 Central Asian Presidents, who were to come, did hold a virtual summit on Jan 27. Did Rahul Gandhi miss that as well?

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதையும் தவறவிட்ட ராகுல்

ஐந்து மத்திய ஆசிய தலைவர்கள் நம்முடைய காணொலி மாநாட்டில் ஜனவரி 27 அன்று பங்கேற்றனர். அதையும் ராகுல் காந்தி தவறவிட்டாரா?" எனக் குறிப்பிட்டிருந்தார். ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் குறித்தும் ஜெய்சங்கர் விமர்சித்தார்.

இதையும் படிங்க: 'வளர்ந்துவரும் பாரதிய ஜனதா; அச்சத்தில் முதலமைச்சர்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.