ETV Bharat / bharat

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்... இதோ....

3 மணி செய்திச் சுருக்கம், TOP 10 NEWS MAY 18, E TV BHARAT, E TV BHARAT TOP 10 NEWS
E TV BHARAT TOP 10 NEWS
author img

By

Published : May 18, 2021, 3:48 PM IST

1. புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி - முதலமைச்சர் அறிவிப்பு

புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

2. சொந்த ஊருக்குச் செல்லும் எழுத்தாளர் கி. ரா.வின் உடல்!

புதுச்சேரியிலிருந்து எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் உடல் கோவில்பட்டி இடைசெவல் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

3. கரோனா நிவாரண நிதி வழங்கிய நளினி

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 29 ஆண்டுகளாக வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, கரோனா நிவாரண நிதியாக தனது சிறை வைப்பு நிதியில் இருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 5000 சிறை கண்காணிப்பாளர் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

4. தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி உற்பத்தி - முதலமைச்சர் ஸ்டாலின்

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், நிரந்தரத் தீர்வாக தமிழ்நாட்டிலேயே ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களைத் துவக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

5. 'டவ்-தே' புயலால் நடுக்கடலில் சிக்கிய 400 பேர் - மீட்பு பணி தீவிரம்!

நடுக்கடலில் 400 பயணிகளுடன் இரண்டு படகுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில், இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

6. நாடு முழுவதும் கோவிட் இரண்டாம் அலையில் 270 மருத்துவர்கள் பலி

கோவிட் இரண்டாம் அலை காரணமாக இதுவரை 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

7. 'குறையும் பாதிப்பு..அதிகரிக்கும் மரணங்கள்'

நேற்று(மே.17) ஒரே நாளில் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 533 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

8. பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவர் கரோனா பாதித்து மரணம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் மருத்துவர் கே.கே.அகர்வால் கரோனா தொற்று காரணமாக, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

9. 24 ஆயிரம் கோவாக்சின் மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது!

ஹைதராபாத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 59 கிலோ எடைகொண்ட 24 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் இன்று (மே.8) சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

10. தனியார் தொழிற்சாலைப் புகையினால் மூச்சித்திணறல்!

நாகராஜாகண்டிகையிலுள்ள தனியார் தொழிற்சாலையைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.