ETV Bharat / bharat

சென்னை - கோவை, சேலம் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு! - தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை - கோவை, சேலம் இடையிலான ரயில் சேவைகளை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரயில்கள் ரத்து
ரயில்கள் ரத்து
author img

By

Published : Nov 29, 2022, 1:08 PM IST

சென்னை: தெற்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சென்னை - சேலம் - சென்னை விரைவு ரயில்கள்:

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11:55 மணிக்கு சேலம் ரயில் நிலையத்திற்கு (வண்டி எண். 22153) புறப்படும் விரைவு ரயில் நாளை, டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மறுமார்க்கத்தில் சேலத்தில் இருந்து இரவு 9:30 மணிக்கு புறப்படும்(வண்டி எண். 22154) விரைவில் ரயில் வரும் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை - கோவை - சென்னை ரயில்:

  • கோவையில் இருந்து காலை 06:15 மணிக்கு(வண்டி எண் 12680), சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் நோக்கியும் மற்றும் மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து (வண்டி எண். 12679) மதியம் 02:30 மணிக்கு, கோவை நோக்கியும் புறப்படும் இண்டர் சிட்டி விரைவு ரயில் டிசம்பர் 3ஆம் தேதி மட்டும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை சென்ட்ரலில் இருந்து (வண்டி எண்.12675) காலை 06.10 மணிக்கு கோவைக்கும், மறுமார்க்கமாக கோவையில் (வண்டி எண் 12676) இருந்து மதியம் 03.15 மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கும் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் டிசம்பர் 3ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை சென்ட்ரலில் இருந்து (வண்டி எண். 12243) காலை 07.10 மணிக்கு கோவை நோக்கியும், மறுமார்க்கமாக கோவையில் இருந்து (வண்டி எண்.12244) மதியம் 03.05 மணிக்கு சென்னை சென்டரல் நோக்கியும் இயங்கும் சதாப்தி விரைவு ரயில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் - கே.எஸ்.ஆர். பெங்களூரு விரைவு ரயில்

கோவையில் இருந்து (வண்டி எண்.22666) காலை 05.45 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூரு நோக்கியும், மறுமார்க்கத்தில் பெங்களூருவில் (வண்டி எண். 22665) இருந்து மதியம் 02.15 மணிக்கு கோவைக்கு நோக்கியும் புறப்படும் உதய் விரைவு ரயில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச வழித்தடத்தில் பறக்க தயாராகும் ஏர் இந்தியாவின் முதல் போயிங் விமானம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.