சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பிராகாஷ் என்கிற பப்பு (22), மதுபோதையில் செல்போன் டவர் மீது ஏறியுள்ளார். இதைப் பார்த்த அவ்வழியே சென்ற மக்கள் சிலர், காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இளைஞருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அந்த இளைஞர், காவல் துறையின் பேச்சை கேட்காமல், அங்கிருந்து கீழே குதித்துவிட்டார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்களும், காவல் துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில், நிதி நெருக்கடியின் காரணமாகவே, இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.