பெங்களூரு: கர்நாடக மாநிலம், தேவனஹல்லியில் அமைந்துள்ளது, கெம்பகவுடா பன்னாட்டு விமான நிலையம். இங்கு நேற்று(நவ.05) நடைபெற்ற சுங்கச்சோதனையில் அழகு சாதனப்பொருள்கள், காலணிகளில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தியது தெரியவந்துள்ளது. விமான நிலையத்திலிருந்து வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்யும் இடத்தில் இவை கண்டறியப்பட்டது.
மெத்தாகுவேலன் எனப்படும் போதை தரும் மயக்க மருந்துகளை, கண்களை அழகூட்டும் சாதனமான மஸ்கராவிலும், காலணிகளிலும் வைத்து கடத்தி வந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கராவில் கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. 490 கிராம் எடையுள்ள இந்தப் போதைப்பொருளின் மதிப்பு 24.5 லட்ச ரூபாய்.
காலணியில் மறைத்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள், வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்டதும், 241 கிராம் எடையுள்ள இதன் மதிப்பு 12 லட்ச ரூபாய் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல் நிகழ்வுகளையும்; வழக்குப்பதிவு செய்த சுங்கத்துறையினர் கடத்தலுக்குத் தொடர்புடைய நபர்கள் குறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மசாலா பாக்கெட்டுக்குள் ஹெராயின் கடத்தல் - நான்கு பேர் கைது!