ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் - போதை பொருள் விற்பனை

நவி மும்பையில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர், 6 பெண்கள் உட்பட 16 நைஜீரியர்களை கைது செய்தனர்.

போதை பொருள்கள் பறிமுதல்
போதை பொருள்கள் பறிமுதல்
author img

By

Published : Jan 1, 2023, 9:31 AM IST

மகாராஷ்டிரா: நவி மும்பையில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்த காவல்துறையினர், 6 பெண்கள் உட்பட 16 நைஜீரியர்களை கைது செய்தனர். நவி மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதைப்பொருள்கள் விற்பனை செய்வதற்காக, சில ஆப்பிரிக்கர்கள் போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக, நவி மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், கார்கர் பகுதியில் உள்ள ரோ ஹவுஸில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் விற்பனைக்காக பதுங்கிவைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடியே எழுபது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, சரஸ், ஹெராயின் மற்றும் மெத்தகுலோன் போன்ற போதைப்பொருள்கள் கண்டறியப்பட்டது.

இந்தப் போதைப்பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக 6 பெண்கள் உட்பட 16 நைஜீரியர்களை கைது செய்தனர். யாரிடம் இருந்து போதைபொருள் வாங்கப்பட்டது? யார் யாரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியாக வசிக்கும் பெண்களிடம் சில்மிஷம்.. 2 பேர் கைது..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.