கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வாடகை பைக்கில் போதைப்பொருள்களை விநியோகம் செய்வதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், அப்பகுதியில் கண்காணிப்பிலிருந்த காவல் துறையினர், மூவரைக் கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து 130 கிராம் ஹெராயின், 2480 போதைப் பொருள் மாத்திரைகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. அதன் மதிப்பு சுமார் 60 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர்.
காவல் துறையினரின் கூற்றுப்படி, இந்தப் போதைப்பொருள்கள் மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவற்றை, கவுஹாத்தியிலிருந்து கிரைண்டர் பாக்ஸ், சோப்பு டப்பாவில் மறைத்துவைத்துக் கொண்டு வந்துள்ளனர்.
இவற்றை வாடகை பைக்கான புவன்ஸில், பல்வேறு பகுதிகளில் நேரடியாக விநியோகம் செய்துவந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஐஸ் பெட்டியில் வைத்து கஞ்சா கடத்தல்: பெண் உள்பட இருவர் கைது!