போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த 2 மாதங்களாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் அமைந்துள்ள கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்றிரவு (நவம்பர் 21) காஷ்மீரின் மெந்தர் செக்டார் பகுதியில் ட்ரோன் நடமாட்டம் இருந்ததை இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க பாகிஸ்தான் ராணுவத்தின் செயலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் திசையில் சர்வதேச எல்லையை கடந்து இரண்டு ட்ரோன்கள் சம்பா செக்டாரில் பறப்பதை எல்லை பாதுகாப்பு படையினர் கவனித்தனர். உடனடியாக, இரண்டு ட்ரோன்களும் சுட்டுவிழ்த்தப்பட்டன.