பெங்களூரு: இந்தியப் பொருளாதாரத்தின் எழுச்சியானது, ஜி20 நாடுகளின் நிலைத்தன்மை, நம்பிக்கை மற்றும் வளர்ச்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று (பிப். 23) ஜி20 நாடுகளின் முதலாவது நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்தி மோடி காணொலி காட்சி மூலமாக உரையாற்றினார்.
-
Sharing my remarks at the G20 Finance Ministers' and Central Bank Governors' Meeting. https://t.co/dD8Frp3QRh
— Narendra Modi (@narendramodi) February 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sharing my remarks at the G20 Finance Ministers' and Central Bank Governors' Meeting. https://t.co/dD8Frp3QRh
— Narendra Modi (@narendramodi) February 24, 2023Sharing my remarks at the G20 Finance Ministers' and Central Bank Governors' Meeting. https://t.co/dD8Frp3QRh
— Narendra Modi (@narendramodi) February 24, 2023
அப்போது அவர், காலநிலை மாற்றம் மற்றும் அதிக கடன் உள்ளிட்ட உலகளாவிய சவால்களை கட்டுப்படுத்த வங்கிகளை வலுப்படுத்த வேண்டும். ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற எங்களது ஜி20 கருபொருள், 8 பில்லியன் மக்கள் தொகையில் பொருளாதார வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றம் குறைவதை கவனிக்கிறது. அதிகம் பாதிக்கப்படும் மக்கள் உள்ள நாடுகளில் வங்கிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். திட்டங்களை கொண்டுவர வேண்டும்.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் நம்பிக்கையை அதிகரிக்கவும், அபாயத்தைக் கட்டுப்படுத்தவும் திட்டங்கள் வகுக்கும் வேளையில், நிதித்துறையில் தொழில்நுட்பத்தின் ஆற்றலை ஆராய்ந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் மிகவும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் திறமையான உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. எங்களது டிஜிட்டல் பரிவர்த்தனை இலவசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே விரைவாக சென்று சேர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், நாட்டில் ஆட்சி, நிதி மேலாண்மையை எளிதாக மாற்றியுள்ளது. UPI பல்வேறு நாடுகளுக்கு டெம்ப்ளேட்டாக இருக்கலாம். இந்த நிதி மேலாண்மை திட்டங்களை G20 நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எனத் தெரிவித்தார். இந்த நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் உலகளாவிய கடன் பாதிப்புகள், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஏற்படும் பொருளாதார அபாயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
அதேபோல, கரோனா தொற்று ஊரடங்கு பின் உலக நாடுகளிடையே பொருளாதார எழுச்சி, வங்கி சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்தும் கலந்தாலோசிக்கப்படும். இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் நிதி அமைச்சர்கள், G20 பிரதிநிதிகள், மத்திய வங்கி ஆளுநர்கள், சர்வதேச பொருளாதார அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: மோடியை விமர்சித்த வழக்கில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருக்கு இடைக்கால ஜாமீன்