ETV Bharat / bharat

அம்பேத்கர்! நம் தேசத்திற்கான தலைவர்... - ambedkar death anniversary

அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று, தற்போதைய சூழலில் அம்பேத்கர் எவ்வாறு நம் மக்களால் அணுகப்படுகிறார் என்றும் அம்பேத்கர் எப்படி நம் தேசத்திற்கான தலைவராக போற்றப்பட வேண்டும் என்பது பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்
அண்ணல் அம்பேத்கர்
author img

By

Published : Dec 6, 2021, 12:43 PM IST

Updated : Dec 6, 2021, 12:52 PM IST

மனித சமூகம் முன்னேற உதவுவதற்கான மகத்தான கருவி கல்வி. அப்படிப்பட்ட கல்வியை கொண்டு நாட்டையே சீரமைக்க முடியும் என்று வாழ்ந்து காட்டிய உதாரணம் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டுமானால் அதை கல்வியை கொண்டு தான் செய்ய முடியும் என ஆணித்தரமாக நம்பியது மட்டுமல்லாமல் செய்தும் காட்டிய அம்பேத்கரின் நினைவு நாளான இன்று, அம்பேத்கர் எவ்வாறு தற்போதைய சூழலில் மக்களால் அணுகப்படுகிறார் என இக்கட்டுரையில் காண்போம்.

சாதிய சாயம் பூசாதீர்கள்

உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் அம்பேத்கரை தனது ஆதர்ச நாயகனாக ஒரு நபர் கூறினால் நம் சமூகம் சட்டென அந்நபரை பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருப்பாரோ என்னும் மனோபாவத்துடன் அணுகும். அம்பேதகர் பட்டியலின மக்கள் தலைவர் மட்டுமல்ல, அவர் அடக்குமுறைக்கு ஆளான ஒவ்வொருவரின் எழுச்சிக்காக போராடிய தேசியத் தலைவர்.

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்
அண்ணல் அம்பேத்கர்

ஆம்! தனது சட்ட அமைச்சர் பதவியை அம்பேத்கர் 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியில் ராஜினாமா செய்ததாக பொது அறிவு புத்தகங்கள் நமக்கு சொல்கிறது. ஆனால் அவை திட்டமிட்டு சொல்ல மறுக்கும் விஷயம் என்னவென்றால், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையான இடஒதுக்கீட்டை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கை உதாசீனப்படுத்தியதையடுத்து தனது அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார். மேலும், பெண்களுக்கான சொத்துரிமையை அளிக்கும் இந்து சட்ட மசோதாவை நேரு அரசாங்கம் நிராகரித்தாலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இப்போது கூறுங்கள், அம்பேத்கர் ஒரு தனிப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களின் தலைவரா? இல்லை ஒட்டுமொத்தமாக அடக்குமுறைக்கும், அத்துமீறலுக்கும் ஆளாகிய மக்களின் வாழ்க்கைக்காக போராடிய நம் தேசத்தின் தலைவரா?

பெண்கள் உரிமை - சமூகத்தின் விடுதலை

பெண்களின் விடுதலைக்காகப் போராடியவர்களில் இந்தியாவில் முதன்மையானவர் அம்பேத்கர். மனு ஸ்மிருதியில் கூறப்பட்டிருக்கும் பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் அனைத்தையும் தவறு என உரக்க உரைத்த தலைவர் அம்பேத்கர். சமூக நீதி, பெண் விடுதலை என நாம் சம காலத்தில் பேசும் போதே பல்வேறு எதிர்வினைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர் கொள்கிறோம். ஆனால் அன்றைய கால சூழலில் மனு ஸ்மிருதிக்கு எதிராக ஒரு தலைவர் பேசியதெல்லாம் வரலாற்று சிறப்புமிக்க செயல். பேசியது மட்டுமல்லாமல் மனு ஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தவும் செய்தார் அம்பேத்கர்.

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்
அண்ணல் அம்பேத்கர்

பெண்களுக்கெதிரான செயல்களோ, கருத்துக்களோ எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்கும் (எரிக்கும்) முதல் ஆளாக அம்பேத்கர் இருந்தார் என்பது நிதர்சனம். ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலையே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்னும் கூற்றை அம்பேதகர் எடுத்துரைத்தார். பெண்களுக்கான சொத்துரிமை, மகப்பேறு விடுப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து அவர் இயற்றிய சட்டம் மறுக்கப்பட்டதாலும் தன் பதவியை ராஜினாமா செய்த உன்னத தலைவர்.

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்
அண்ணல் அம்பேத்கர்

கற்றல் மட்டுமே போதாது

கல்விதான் ஒரு மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆயுதம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அந்த கல்வி தன்நலன், தன் குடும்பம் என சுருங்கி விட்டால் அந்த கல்வியின் முழுமையான பயன் நம் சமூகத்திற்கு கிடைக்காமல் போய்விடும். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்து மனிதராய் பிறந்த அனைவரும் சமம் என்று சொல்ல கல்வியை பயன்படுத்தலாம் என எடுத்துக்காட்டியவர் அம்பேத்கர். அவரது கல்வியறிவுக்கும், வாசிப்பு பழக்கத்திற்கும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை கிடைத்திருக்கும். ஆனால் தான் கற்ற கல்வி என்றுமே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார், வாழ்ந்தும் காட்டினார்.

அம்பேத்கர் என்னும் மாமனிதர் இல்லையென்றால் இன்றைய இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் வாழ்க்கை மிக மோசமாக இருந்திருக்கும் என்பது தான் உண்மை. தன் சிலையை சேதப்படுத்துபவர்களின் உரிமைக்காகவும் போராடியவர் அம்பேத்கர். ஆம்! அவர் தான் தேசத்தின் தலைவர் அம்பேத்கர்.

இதையும் படிங்க:65ஆம் ஆண்டு நினைவு: அதிகார குரலற்றவர்களின் அறிவாயுதம் அண்ணல் அம்பேத்கர்

Last Updated : Dec 6, 2021, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.