டெல்லி: இந்தியாவின் நவீன ஆடம்பர விருந்தோம்பலின் தந்தை என அழைக்கப்படும் ஓபராய் குழுமத்தின் தலைவர் பிருத்வி ராஜ் சிங் இன்று (நவ.14) காலமானார். ஓபராய் குழுமத்தின் சார்பில் பிஆர்எஸ் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
-
With profound grief and sorrow, we inform you of the passing of our beloved leader, Mr. P.R.S. Oberoi, Chairman Emeritus. His passing is a significant loss for The Oberoi Group and the hospitality industry in India and Overseas. May his soul find eternal peace.
— Oberoi Hotels & Resorts (@OberoiHotels) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
#TheOberoiGroup pic.twitter.com/3bYwvxJjcd
">With profound grief and sorrow, we inform you of the passing of our beloved leader, Mr. P.R.S. Oberoi, Chairman Emeritus. His passing is a significant loss for The Oberoi Group and the hospitality industry in India and Overseas. May his soul find eternal peace.
— Oberoi Hotels & Resorts (@OberoiHotels) November 14, 2023
#TheOberoiGroup pic.twitter.com/3bYwvxJjcdWith profound grief and sorrow, we inform you of the passing of our beloved leader, Mr. P.R.S. Oberoi, Chairman Emeritus. His passing is a significant loss for The Oberoi Group and the hospitality industry in India and Overseas. May his soul find eternal peace.
— Oberoi Hotels & Resorts (@OberoiHotels) November 14, 2023
#TheOberoiGroup pic.twitter.com/3bYwvxJjcd
1929ஆம் ஆண்டு பிறந்த பிருத்வி ராஜ் சிங் ஓபராய், இந்தியாவில் ஹோட்டல் துறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். மேலும் தி ஓபராய் குழுமத்தின் முதன்மை நிறுவனமான EIH லிமிடெட்டின் செயல் தலைவராக இருந்தவர். உலகளவில் பிஆர்எஸ் ஓப்ராய் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார்.
பிஆர்எஸ் ஓப்ராய் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றில் நாட்டிற்கு அளித்த சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி அதனை அங்கீகரிக்கும் விதமாக 2008ஆம் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மேலும் 2012ஆம் ஆண்டு சர்வதேச சொகுசு பயண சந்தை ILTM (International Luxury Travel Market) என்ற அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. பிஆர்எஸ் ஓபராய்க்கு 'கார்ப்பரேட் ஹோட்டலியர் ஆஃப் தி வேர்ல்ட்' விருதை ஹோட்டல் (HOTELS) பத்திரிகை அமெரிக்கா வழங்கியுள்ளது. இது போல் பல விருதுகள் பெற்றுள்ளார்.
கபஷேராவிலுள்ள ஓபராய் பண்ணையிலுள்ள பகவந்தி ஓபராய் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் பிஆர்எஸ் ஓபராய்க்கு இறுதிச்சடங்கு நடைபெறும். இதில், அவரை அறிந்தவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறும். எங்கள் நிறுவனத்தின் கீழ் உள்ள ஹோட்டல் மற்றும் நிறுவனங்களில் அவருக்காகப் பிரார்த்தனை செய்யப்படும் என ஓபராய் குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள்; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மலர் தூவி மரியாதை!