ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: ஒரேநாளில் 40,715 பேருக்குப் பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 40 ஆயிரத்து 715 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 199 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

COVID-19
COVID-19
author img

By

Published : Mar 23, 2021, 3:15 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 715 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 199 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

இந்தியாவில் கோவிட் - 19 நிலவரம்

இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 16 லட்சத்து 86 ஆயிரத்து 796 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்று லட்சத்து 45 ஆயிரத்து 377 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 166 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (மார்ச் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (மார்ச் 22) வரை நாடு முழுவதும் 23 கோடியே 54 லட்சத்து 13 ஆயிரத்து 223 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் ஒன்பது லட்சத்து 67 ஆயிரத்து 459 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 32 லட்சத்து 53 ஆயிரத்து 59 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை நான்கு கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 594 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதிப்புகள் ஏற்படும் மாநிலங்கள்

கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் 24 ஆயிரத்து 645 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக கேரளா, பஞ்சாப், குஜராத், சத்தீஸ்கர், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: பரம்வீர் சிங் விவகாரத்தில் உண்மையை மறைக்கும் சரத் பவார்: குற்றஞ்சாட்டும் பட்னாவிஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.