ETV Bharat / bharat

கோவிட் -19 எண்ணிக்கையை மாநிலங்கள் மறைக்க கூடாது - மத்திய அரசு

author img

By

Published : May 19, 2021, 7:56 AM IST

கோவிட்-19 பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்பான புள்ளி விவரங்களை மாநில அரசுகள் மறைக்க கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Union Ministry of Health and Family Welfare

இந்தியாவில் நிலவும் கோவிட்-19 இரண்டாம் அலை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விரிவான செய்தியாளர் சந்திப்பை இன்று (மே 18) நடத்தியது. அதில் பேசிய சுகாதாரத்துறை இணை செயலர் லவ் அகர்வால் பேசியதாவது:

இந்திய மக்கள்தொகையில் 2 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே கோவிட்-19 பாதிப்பு பதிவாகியுள்ளது. மீதமுள்ள 98 விழுக்காடு மக்களை பாதிப்பிலிருந்து தப்ப வைக்க அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாள்களாக தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உயிரிழப்பு விகிதம் உயர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் 199 நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன. மாநிலங்களிடம் இருந்து தொடர்ச்சியான அறிக்கைகளை மத்திய அரசு பெற்று வருகிறது. கோவிட்-19 பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்பான புள்ளவிவரங்களை மாநில அரசுகள் மறைக்க கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரும் பாதிப்பை சந்தித்து வந்த குஜராத், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 22 மாநிலங்களில் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் எனப்படும் நோய் பாதிப்பு தன்மை 22 விழுக்காட்டிற்கு மேல் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அருசால பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தற்போது பாதிப்பு உயர்ந்து காணப்படுகிறது" என்றார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.